சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர, மனிதன் தனது மனதில் இருந்து சாதியை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக சத்ரபதி சம்பாஜி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பகவத் பேசினார்.
அப்போது, கடந்த காலத்தில் சாதியானது தொழில் மற்றும் வேலையுடன் தொடர்புடையதாக இருந்தது, பின்னர் அது சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, பாகுபாட்டிற்கு வழிவகுத்தது என தெரிவித்தார்.
இதை நேர்மையாக செய்தால், 10 முதல் 12 ஆண்டுகளுக்குள் சாதி பாகுபாடு ஒழிக்கப்படும் என்றார்.
பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த பகவத், சங்கம் சமூகத்துடன் இணைந்து இந்தியாவை அதன் உச்சகட்ட பெருமைக்கு இட்டுச் செல்வதே தனது நோக்கம் என்று கூறினார்.
சங்கம் தனிமனித ஒழுக்கக் கட்டமைப்பின் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது ஒரு எதிர்வினையால் உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல, யாருடனும் போட்டி போடும் அமைப்பும் அல்ல என்று பகவத் விளக்கம் அளித்தார்.
















