புத்தாண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், ஆளுநர் உரையில் கவர்ச்சியகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கும். அதன்படி, நடப்பாண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
இதில், பங்கேற்று உரை நிகழ்த்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலக உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழக அரசு தயாரித்த உரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளைய கூட்டத்தில் முழு உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மேலும், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளுநர் உரையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















