காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சத்துணவு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மாநிலத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ள மையங்களில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன.
ஊழியர்கள் பெரும் மன உளைச்சலுடன் பணியாற்றும் வரும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால், நாளை முதல் பெரும்பாலான சத்துணவு மையங்கள் செயல்பட வாய்ப்பில்லை என சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
















