கூத்தங்குழியில் தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 கடற்கரை கிராமங்கள் உள்ள நிலையில், மீனவர்கள் நாட்டுப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்களின் பிரதான கோரிக்கையை ஏற்று உவரி, கூட்டபுளி ஆகிய ஊர்களில் தூண்டில் பாலம் அமைத்துக்கப்பட்டுள்ளது.
கூத்தங்குழியில் 2 ஆயிரத்து 500 மீட்டருக்கு தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை விடப்பட்ட நிலையில், 500 மீட்டர் தொலைவிற்கு மட்டுமே தூண்டில் பாலம் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக, கடல் சீற்றத்தில் சிக்கி நாட்டுப்படகுகள் சேதமடைவதாக கூறி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூவரசர் தேவாலயம் முன்பு போராட்டத்தை தொடங்கிய மீனவர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடற்கரை வழியாக பேரணியாக சென்றனர். இந்த போராட்டத்தில் ஆலய பங்குத்தந்தை, பள்ளிக் குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
















