திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா, இன்று காலை வேத மந்திரம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் கோயிலின் கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
















