நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை, சிறுத்தை கவ்வி சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து கூறிவந்தனர். இந்தநிலையில், அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டின் மாடியில் இருந்த நாயை, சிறுத்தை கவ்வி சென்றது.
இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. இதனிடையே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
















