கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 2வது முறையாக விஜய் ஆஜரானார். முதல் நாள் விசாரணையில் அளித்த பதில்களின் அடிப்படையில், விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
பரப்புரைக்கு தாமதமாக வந்தது தொடர்பாக அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய அதிகாரிகள், தாமதம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவித்துள்ளனர். இதனிடையே, அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள குற்றப்பத்திரிகையில் தவெக தலைவர் விஜய் பெயர் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















