பிரதமர் மோடி – ஐக்கிய அரபு அமீரக அதிபர் இடையேயான சந்திப்பின்போது, பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமீரக அதிபரின் இந்திய பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளதாக கூறினார். மேலும், 2032ம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத்தை 200 பில்லியன் டாலராக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவின் பிராந்திய முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாகவும், அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஆதரவு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இரு நாட்டு தலைவர்களுமே எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கண்டித்ததாக குறிப்பிட்ட விக்ரம் மிஸ்ரி, பயங்கரவாத செயல்களுக்கு காரணமானவர்களையும், நிதியுதவி வழங்குபவர்களையும் நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தியதாக கூறினார்.
















