தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் தொடங்கும். அதன்படி, நடப்பாண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
இதில், பங்கேற்று உரை நிகழ்த்த ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் சட்டசபை செயலக உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தமிழக அரசு தயாரித்த உரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அவர் வாசிக்கவுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
















