மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மைதானத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பார்வையிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பார்வையிட்டார்.
















