பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக தேசிய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்ற விதி உள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம், 2024ல் நடந்த மக்களவை தேர்தலையொட்டி நீட்டிக்கப்பட்டது.
பாஜக தேசிய தலைவராக இளைஞர் ஒருவரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்த நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த பீகார் அமைச்சரான நிதின் நபின் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேசிய தலைவர் பதவிக்கான தேர்தலில், நிதின் நபினை முன்மொழிந்து 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நபின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















