ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பேசிய அவர், கலாசார நிகழ்வுகளை முடக்குவதில் எதிர்க்கட்சிகள் முனைப்புடன் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார்.
ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என கூறிய நிதின் நபின், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவினர் கடுமையாக உழைத்து கட்சியை வெற்றி பெற செய்வார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
















