கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் தனக்கு பாஸ் எனவும், தான் ஒரு தொண்டன் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதின் நபின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
உலகின் மாபெரும் கட்சியான பாஜகவின் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார் எனவும், அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாஜகவை நிர்வகிப்பது மட்டுமே நிதின் நபினின் பொறுப்பு அல்ல என கூறிய பிரதமர் மோடி, அதனையும் கடந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதும் அருவடைய பணி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கட்சி விவகாரத்தில் நிதின் நபின்தான் தனக்கு பாஸ் எனவும், தான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பாஜக, விரைவில் கேரளாவிலும் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
















