சென்னையில் உள்ள பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை கொடுங்கையூரில் உள்ள A1 பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில், நேற்று 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அண்மையில் கொளத்தூரில் திறக்கப்பட்ட அறைநிலையத்துறைக்கு சொந்தமான கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியின் கட்டுமான பணிகளுக்கு, அனைத்து பொருட்களும் A1 ஹார்டுவேர்ஸ் நிறுவனம் சப்ளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















