கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பங்குத்தந்தை இல்லாததால் இறந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் தர்ணா போராட்டம் செய்தனர்.
புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல், திருப்பலி செய்வற்காக தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
அங்கு பங்குத்தந்தை இல்லாததால் பக்கத்து கிராமத்தில் இருந்து பங்குத்தந்தை வரவழைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் புதுக்குப்பம் கிராமத்தில் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்களும் ஒரு தரப்பு மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















