ராமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாம்பன் தூக்கு பாலத்தில் சுற்றுலா மற்றும் சரக்கு கப்பல்கள் கடந்து சென்றன.
பிரதமர் மோடி திறந்து வைத்த இந்த நவீன கட்டமைப்பு உடைய பாலத்தில் இரண்டு மாதங்களுக்கு பின் கப்பல்கள் கடந்து சென்றன. கொச்சியில் இருந்து அந்தமானுக்கும், மங்களூரில் இருந்து கடலூருக்கும் கப்பல்கள் சென்றன.
செங்குத்தாக பாலம் உயர்த்தப்பட்டதையும், கப்பல்கள் கடந்து சென்றதையும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
















