பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வரும் 26ஆம் தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு தற்போதே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 ஆகிய 3 நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்து விட்டு அனைத்து வழிகளிலும் பொது தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனிடையே, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பத்து நாட்களும் கட்டண தரிசனத்தை ரத்து செய்து அனைத்து வழிகளிலும் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் வழக்கமான நாட்களில் 200 ரூபாய் கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு மின்விசிறி உள்ளிட்ட உரிய அடிப்படை வசதிகள் இல்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
















