மத்திய கிழக்கில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்து வருகிறது. அதனால், எந்நேரமும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Diego Garcia) “டியாகோ கார்சியா” என்பது மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்படும் B-2, B-52 போன்ற நீண்ட தூர குண்டுவீச்சு விமானங்களின் இராணுவ நடவடிக்கைகளுக்கான முக்கிய தளமாகும்.
அமெரிக்க விமானப்படையின் நான்கு C-17A குளோப்மாஸ்டர் III கனரக சரக்கு விமானங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் உள்ள முக்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் தளமான “டியாகோ கார்சியாவை” நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
சி-141 ஸ்டார்லிஃப்டருக்குப் பதிலாக உருவாக்கப்பட்ட சி-17 விமானம், மேம்பட்ட வான்வழிப் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 170,900 பவுண்டுகள் வரை சரக்குகளை ஏற்றிச் செல்லக்கூடியதாகும். மேலும் குறுகிய, தார் போடப்படாத ஓடுபாதைகளில் இருந்து இயங்கும் திறன் கொண்டதாகும்.
விமானக் கண்காணிப்புத் தரவுகளின்படி RCH183 மற்றும் RCH181 என்ற இரண்டு அமெரிக்க விமானப்படை சி-17ஏ குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானங்கள், பிரிட்டனின் RAF லேகன்ஹீத் தளத்திலிருந்து புறப்பட்டு, மத்திய தரைக்கடல் மீது சென்று கொண்டிருக்கின்றன.
(USS Spruance) யுஎஸ்எஸ் ஸ்ப்ரூயன்ஸ் மற்றும் (USS Michael Murphy) யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி ஆகிய அழிப்புக் கப்பல்களுடன் அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான (USS Abraham Lincoln) யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன், மத்திய கிழக்குப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
மேலும், எஃப்-15 ஜெட் விமானங்கள் மற்றும் பேட்ரியாட் ஏவுகணைகள் என ஒரு ராணுவ குவிப்பே மத்திய கிழக்கு நோக்கி அனுப்பப்பட்டுள்ளன.
அதயத்துல்லா அலி கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக கடந்த டிசம்பர்28 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடந்துவரும் போராட்டங்களில் பலர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில்,பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 12, F-15 போர் விமானங்கள் ஜோர்டானுக்கு வந்துள்ளன.
அபுதாபியில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அருகில் உள்ள ஓமன் வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா மீது பறக்கிறது. எனினும், இந்த விமானம் எதை நோக்கி பறக்கிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நான்கு வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களுடன் சுமார் 15 அமெரிக்க F-15 போர் விமானங்கள் பிரிட்டனில் இருந்து ஜோர்டானில் தரையிறங்கியுள்ளன. மூன்று கூடுதல் F-35I Adir stealth போர் விமானங்கள் Nevatim நெவாடிம் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளன. மேலும்,அமெரிக்க விமானந்தாங்கித் தாக்குதல் கப்பல் Malacca ஜலசந்தியைக் கடந்துள்ளது.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் போராகக் கருதப்படும் என்று ஈரான் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, அமெரிக்கா இந்த ராணுவக் ராணுவக் குவிப்பை செய்து வருகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் தாக்கினால் தன்னைத் தற்காத்துக் கொள்ள இன்னும் தயாராகவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாக கூறப்படுகிறது.
கடல் வழித் தாக்குதலுக்கு மட்டுமின்றி, வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களையும் முன்னெடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் நவீன போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களில் குவித்துள்ளது.
“போர் ஆயத்தம்” என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் மூலம், அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட சில நொடிகளில் ஈரானை அமெரிக்கப்படைகள் தாக்கி அழிக்கும் என்று கூறப்படுகிறது. முக்கிய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
















