சென்னையில் மாமூல் வழங்க மறுத்த தம்பதியை கள்ளச்சாராய வழக்கில் சிக்க வைத்த காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மயிலாப்பூரில், தண்ணீர் கேன் மூலம் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கூறி வனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், சென்னையில் கள்ளச்சாராயம் ஊடுருவிய விதம் குறித்து விசாரிக்க உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், வனிதாவும் அவரது கணவரும் கள்ளச்சாராய கடத்தலில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்தது.
ஏற்கனவே மது விற்பனை வழக்கில் தொடர்புடைய வனிதா, மாமூல் வழங்க மறுத்ததால் பொய் வழக்கு போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இதில் தொடர்புடைய மூன்று காவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி காவலர்கள் பிரகலநாதன், செல்வா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வினோத் என்ற காவலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
















