வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை போன்ற பத்து விருப்ப சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்கித் தருமாறு தவெக கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், 234 தொகுதிகளுக்கும் பொதுச்சின்னமாக தவெகவுக்கு விசில் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தவெக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி கணக்குகளை தாக்கல் செய்துள்ளதால் பொதுச்சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திற்கு, அவர்கள் ஏற்கனவே வைத்திருந்த டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
















