அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப், அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இக்குழுவில் இணையும் முதல் அரபு நாடு என்ற அந்தஸ்தை அமீரகம் பெற்றுள்ளது. இதற்கிடையே, அமைதி வாரியத்தில் பிரான்ஸ் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
















