சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றமைக்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தெளிவுபடுத்தும் வகையில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கான முன்னுரிமையின் அடிப்படையில் நடைபெற்ற பணி நியமனங்களை செல்லுபடியாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் புதியதாக பணிக்கு சேருவோருக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மீகை ஊதியத்தை கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என சட்டமுன்வடிவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
















