சென்னை திருவான்மியூர் அருகே வாடகை ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன்பு கட்டட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்
சென்னை ஈசிஆர் சாலை திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே சுகந்தி என்பவர் தனக்கு சொந்தமான மூன்று அடுக்கு கட்டடத்தின் கீழ் தளத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் எலைட் கடை நடத்த வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கடையின் ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில், கடையை காலி செய்யுமாறு சுகந்தி வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால், கடையை காலி செய்யாததால் டாஸ்மாக் எலைட் மதுபான கடை முன்பு கட்டட கழிவுகளை கொட்டி அதன் மீது அமர்ந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறினர். இதனை தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டு காவல நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
















