பிரதமர் வருகையால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், ட்ரபிள் என்ஜின் அரசை வைத்துக் கொண்டு, எல்லா மாநிலங்களிலும் டபுள் என்ஜின் அரசு நடத்தும் பிரதமர் மோடியை முதலமைச்சர் விமர்சிப்பதாக கூறியுள்ளார்.
மாநில அளவில் மட்டுமின்றி மாநகராட்சிகளிலும் பாஜக வென்று Trible engine அரசாக போய்க் கொண்டிருப்பதாகவும், பஞ்சாயத்து தேர்தலைக்கூட நடத்த பயந்து, போதை, கடன், பாதுகாப்பின்மை கொண்டதுதான் திமுகவின் Trouble Engine அரசு எனவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு பிரதமர் வந்த உடனேயே முதலமைச்சர் அடையும் பதற்றம் அவரது பதிவு மூலம் நன்றாக தெரிவதாகவும் தமிழிசை செளந்தரரான் கூறியுள்ளார்.
















