ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே போதிய தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கமுதி அருகே முஷ்டக்குறிச்சி, பெருமாள் குடும்பம்பட்டி, ஆசூர் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் போதிய மழை இல்லாததால், பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி கருகி வீணானது. இதனால், கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கையில் சாப்பாட்டுத் தட்டுகளையும், கருகிய நெற்கதிர்களையும் ஏந்தியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















