ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம் காத்தான் பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் சேகரிப்படும் குப்பைகள் பட்டினம் காத்தான் குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. தொடர்ந்து அங்கு தரம் பிரிக்கப்படாமல் குப்பைகள் எரியூட்டுப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் குப்பைகள் எரிக்கப்படுவதை முழுமையாக தடை செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















