கோவளத்தில் இயங்கி வரும் ஏரோ டான் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் மற்றும் திருப்போரூர் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் – மாமல்லபுரம் இடையே சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு நபருக்கு ஆறாயிரம் ரூபாய் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையை ‘ஏரோ டான் சாப்பர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தொடங்கியது.
இதனையடுத்து, திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, இந்த நிறுவனம் முறையான விமான செயல்பாட்டு அனுமதி பெறவில்லை என்றும், பாதுகாப்பற்ற முறையில் இயக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதன் விளைவாக, கடந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி மாவட்ட நிர்வாகம் இந்தச் சேவையை நிறுத்தி, சீல் வைத்தது. இந்நிலையில், கடந்த வாரம் பொங்கல் விடுமுறையை ஒட்டி ஹெலிகாப்டர் சுற்றுப்பயணம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், திருப்போரூர் தொகுதி விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த நிறுவத்தின் சிஇஓ நிஷா, சபாநாயகர் அப்பாவு-விடம் புகார் அளித்தார்.
அதன் எதிரொலியாக ஏரோ டான் நிறுவனத்திடம் ஹெலிகாப்டர் சவாரி செய்ய எந்தவித சட்டப்பூர்வமான ஆவணம் இல்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்.எஸ்.பாலாஜி, அரசு தரப்பில் இருந்து பெறப்பட்ட ஆவணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது கருத்தை தெரிவித்தார்.
VIDEO LINK:
















