ரேடாரில் இதுவரை சிக்காத போர் விமானமான எப்-47 ரக விமானம் அமெரிக்க ராணுவத்திற்கு கிடைக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தன் ராணுவ பலத்தை மேம்படுத்த பல்வேறு புதிய நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக எப்-47 ரக போர் விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது.

அபாயகரமான இந்த போர் விமானத்த தயாரிக்கும் பணிகளை போயிங் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ள நிலையில் விமானத்தை விரைவில் வாங்க இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
















