விசில் சத்தம் கொஞ்ச நேரம் தான் கேட்கும் என்றும், ஆனால், இரட்டை இலை சின்னம் மக்கள் மனதில் நிரந்தமாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக வெளியிட்ட 5 முதல்கட்ட தேர்தல் அறிக்கையின் துண்டு பிரசுரங்களை புதுக்கோட்டை நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் முந்தி முத்தான 5 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளதாக கூறினார்.
ஆட்சி மாற்றத்திற்கான மக்களுடைய மனநிலையை களத்தில் காண முடிகிறது எனவும் கூறினார். மேலும், யார் வேண்டுமானாலும் கருத்துகளை கூறலாம் என்றும், அதனை தீர்மானிப்பது மக்கள்தான் எனவும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
VIDEO LINK: https://youtu.be/3702RVnzkDg
















