பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
பழனி முருகன் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடிமரத்தின் அருகே வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்று மேள தாளங்கள் முழங்க தைப்பூச விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















