பத்மஸ்ரீ விருது பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு என கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கால்நடை சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
கால்நடை அறிவியல் துறையில், சிறந்த பங்களிப்பை வழங்கிய காரணத்திற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் விருது பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு என்றும் அவர் கூறினார்.
















