விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கண்மாயில் அமைச்சர் தங்கம் தென்னரசு உதவியாளர் விதிகளை மீறி மண் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தொப்பலாகரை கிராமத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது.
இந்த கண்மாயில் சாலை பணிகளுக்காக அமைச்சர் தங்கம் தென்னரசுவின் உதவியாளர் பாலகுரு விதிகளை மீறி மண் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















