மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களை திமுக மாநாட்டுக்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் மூலம் உதயசூரியன் சின்னம் பொறித்த புடவைகளை பெண்களுக்கு திமுகவினர் விநியோகித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கிராம சபை கூட்டத்திற்கு வந்த அவர்களை அரசு பேருந்துகள் மூலம் தஞ்சாவூரில் நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டிற்கு அழைத்து சென்றதாக புகார் எழுந்துள்ளது.
















