விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
T.வேப்பங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தொட்டியாங்குளம் கிராம மக்கள் பங்கேற்று, கண்மாய் கரை ஓரமாக அமைந்துள்ள கிழவி அம்மன் கோயிலுக்கு பட்டா கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.
ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தபோது உடம்பில் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர், வட்டார வளர்ச்சி அலுவலரின் காரில் தொங்கியபடி சென்றதால் பரபரப்பு நிலவியது.
அதைத் தொடர்ந்து அந்த நபர் உட்பட 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பதற்றமான சூழல் காரணமாக தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
















