உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முன் வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக உருவாகும் என்றும், இந்தியா அனைத்து துறைகளிலும் தொடர்ச்சியாக பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
















