பயிர்கள் குறித்த டிஜிட்டல் சர்வே கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் தாமதத்தால் 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கஃரீப், ராபி பருவங்களில் மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் குறித்து ஆன்லைன் வாயிலாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த சர்வே அடிப்படையில், மானிய நிதி, உரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இதற்கென பிரத்யேகமாக, மொபைல் போன் செயலியையும் மத்திய அரசு உருவாக்கி உள்ளது.
இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இப்பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை எனவும் இதனால் மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்பணிகளை பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக மத்திய அரசிடம் அவகாசம் கேட்கப்பட உள்ளதாகவும் வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















