நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, குடியரசு தலைவரின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது என கூறினார்.
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும், இந்த ஒப்பந்தம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் எனவும் தெரிவித்தார்.
9வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என பாராட்டினார். இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்றும், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் விதமாக நாடாளுமன்ற திகழ வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் மத்திய அரசு தயாராகவே இருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
















