சென்னை அரசு கல்லூரியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் கேண்டீன் மாஸ்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் செயல்பட்டு வரும் கேண்டீனில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அதே கேண்டீனில் மாஸ்டராக வேலைபார்த்து வந்த நபர், அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கேண்டீன் மாஸ்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பெண் சற்று மனவளர்ச்சி குன்றியவர் என்பதால், அவரிடம் மேலும் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேண்டீன் மாஸ்டர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
















