சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கம்பரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் கடந்த 2022ஆம் பாரதியாரின் சிலையை திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, 2023ஆம் ஆண்டு மக்கள் மாளிகையில் இருந்த தர்பார் மண்டபத்திற்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்தார்.
அதே ஆண்டு, ராமலிங்க அடிகளாரின் சிலையை திறந்து வைத்த ஆளுநர், தற்போது மக்கள் மாளிகையில் கம்பரின் சிலையை திறந்து வைத்துள்ளார். கம்பர் வனம் பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள கம்பர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் HV ஹண்டே, கம்பராமாயண புத்தகத்தை ஆளுநருக்கு பரிசளித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆளுநர் தமிழில் கையெழுத்திட்ட கம்பராமாயணம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
















