தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அண்ணாமலை
Jul 29, 2026, 02:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது.

அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: MK StalinTamil Nadu law and orderChennai government arts collegeold women sexually assaultedTamil NadubjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் :அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies