சென்னை அசோக்நகரில் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக தகவல் அனுப்பிய உணவக ஊழியரை, சீரியல் நடிகை அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தார்.
தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் இந்தியன் இரண்டாம் பாகம் போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் ஞானலீலா என்ற ஸ்ரீஅஸ்வினி.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான, ‘கேட்ட வார்த்தை, கெட்ட வார்த்தை’ என்ற குறும்படம் வைரலாகி கலவையான விமர்சனங்கள் குவிந்தன.
இந்நிலையில் நடிகை அஸ்வினியின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு, ஒருவர் ஆபாசமாக பேசி தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அவருடன் நட்புடன் பழகுவதுபோல மெசேஜ் செய்த அஸ்வினி, அந்த நபர் அசோக் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்ப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து அந்த உணவகத்துக்கு கணவருடன் சென்ற அஸ்வினி, தனக்கு ஆபாசமாக தகவல் அனுப்பிய நபரை கையும் களவுமாக பிடித்து அடித்து துவைத்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரை பிடித்து அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
















