தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறது.
தனியார் நிறுவனம் தொழிலாளர் விரோதப்போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அரசு பணி நிரந்தர செய்ய வேண்டும், தொழிற்சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
















