கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முறையற்ற உறவுக்கு இடையூறாக இருந்ததால் மாமனாரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது காரில் வந்த மர்ம கும்பல் அவரை தீவைத்து எரித்தது.
இதனைக்கண்ட பொதுமக்கள் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த மணிகண்டன் மற்றும் குபேந்திரன், பார்த்திபன் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ராஜேந்திரனின் மருமகள் ஜெயப்பிரியாவுக்கும், குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டனுக்கும் இடையே முறையற்ற உறவு இருந்து வந்துள்ளது. இதனை ராஜேந்திரன் கண்டித்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட கும்பல் தீயை வைத்து எரித்துள்ளது.
இதனை வாக்குமூலமாக பெற்றுக்கொண்ட போலீசார் பெண் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















