டெல்லியில் பிப்ரவரி 16ம் தேதி தொடங்கவுள்ள AI மாநாட்டிற்கு உலகளவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிப்ரவரி 16 முதல் 20ம் தேதி வரை AI மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதில் 15 நாடுகளின் தலைவர்கள், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் சிஇஓ-க்கள் பங்கேற்க உள்ளனர்.
AI தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா செய்து வரும் திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவரிக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக பேட்டியளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்லியில் நடைபெறவுள்ள A I மாநாடு, உலக அளவில் அபரிமிதமான வரவேற்பை பெற்றுள்ளதாக கூறினார்.
AI உள்கட்டமைப்பு துறையில் ஏற்கனவே சுமார் 70 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், இந்த மாநாடு முடிவதற்குள் முதலீடு இரட்டிப்பாகும் எனவும் கூறினார்.
உலகளவில் இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வாக மாநாடு உருவாகி வருகிறது எனவும் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்தார்.
















