கரூரில் சட்டவிரோத கல்குவாரி கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கனிமச் சுரண்டலை கேள்வி கேட்டதற்காக, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகவும், இந்த ரவுடிகள், முழுக்க முழுக்க திமுகவின் பாதுகாப்பிலேயே செயல்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து, திமுக அரசு கடத்தல்காரர்களுக்கும், ரவுடிகளுக்கும்தான் ஆட்சி நடத்துகிறதா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், சட்டவிரோத கல்குவாரி கொள்ளைக்குப் பின்னால் உள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
















