நாமக்கல் அருகே பட்டியலின மக்களுக்கான நிலத்தில், போலி பட்டா தயாரித்து வீடு கட்டிய பேரூராட்சி தலைவியை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியின் தலைவியாக திமுகவை சேர்ந்த பாப்பு என்பவர் உள்ளார்.
இவர், அப்பகுதியில் பட்டியலின மக்களுக்குரிய நிலத்திற்கு போலி பட்டா தயாரித்து, தனக்கு வீடு கட்டியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு, பாஜக பட்டியல் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது, பேரூராட்சி தலைவி பதவி விலக வேண்டும் என்றும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் பாஜகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
















