புதுச்சேரியில் ஓட்டுநர், மதுபோதையில் பள்ளி பேருந்தை இயக்கிய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில் மாணவர்கள் சிலர், பள்ளி பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் வாகனத்தை தாறுமாறாக இயக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள், பேருந்தை மடக்கி ஓட்டுநரிடம் விசாரித்தனர்.
அதில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
















