இந்து கோயில்களை அழித்த கஜினி முகமதுவையும், லோடி வம்சத்தையும் காங்கிரஸ் தொடர்ந்து புகழ்ந்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நகிழ்ச்சி ஒன்றில், குடியரசு முன்னாள் துணை தலைவர் ஹமீத் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது கஜினி முகமதுவும், லோடி வம்சத்தையும் அன்னியர்கள் என கூறுவது தவறு என அவர் குறிப்பிட்டார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜக செய்தித்தொடர்பாளர் செஷாத் பூனாவாலா, நாட்டின் உண்மையான வரலாற்றை காங்கிரஸ் திரித்துக் கூறுவதாகவும், இந்துக்களின் அடையாளங்கள் மற்றும் புராதன சின்னங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை காங்கிரஸ் குறைத்து மதிப்பிடுவதாகவும் சாடினார்.
குஜராத்தில் இருந்த சோமநாதர் கோயிலை அழித்து அவமதித்த கஜினி முகமதுவை காங்கிரஸ் பாராட்டுவதாக குற்றம்சாட்டிய அவர், இந்துக்களுக்கு எதிராக பல அட்டூழியங்களை செய்த அவுரங்கசீப் மற்றும் பிறரின் குற்றங்களை காங்கிரஸ் மூடிமறைப்பதாகவும் விமர்சித்தார்.
















