மத்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொத்துக்களை விற்கும் போது செலுத்த வேண்டிய வருமான வரி குறைக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் ரூபாய் வரையிலான சொத்துக்களை வெளியிட தவறும் நபர்களுக்கு வழக்குகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாவுக்கு 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வரி பிடித்தம் 2 சதவீதமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்படும்போது பிடித்தம் செய்யப்படும் வரியும் குறைக்கப்பட்டுள்ளது.
















