வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக பட்ஜெட் அமைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்றும், அருமையான பட்ஜெட்டை அளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார் எனவும் பாராட்டியுள்ளார்.
எதிர்கால நோக்கமுடைய பட்ஜெட் இந்தியாவை செயற்கை நுண்ணறிவு, தரவு மையங்களின் மையமாக மாற்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















